தமிழ்நாடு

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

இந்திய சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், முறைப்படி வழக்கறிஞர்களாகப் பணியாற்ற குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று துவக்கி வைத்தார்.

இதையடுத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி திரையுடன் கூடிய 33 வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.