Covid19அரசியல்தமிழ்நாடு

மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை .

கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையிலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கு நடவடிக்கைகள் இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இதில், பண்டிகை காலத்தையொட்டி நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்று திரையரங்க உரிமையாளர்களுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.