அரசியல்தமிழ்நாடு

பண்டிகை காலத்தின்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – தமிழக முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. அதேநேரம் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தொற்று பரவல் அதிகரிக்குமோ என மக்களிடையே அச்சம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலைமச்சர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சகள், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

அந்த ஆலோசனையின்போது பேசிய முதலைமச்சர் பண்டிகை காலத்தின்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையின் இறுதியில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் 35 விழுக்காட்டினருக்கு மேல் முகக்கவசம் அணிவதில்லை என குறிப்பிட்டார். காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் எனக்கூறிய முதலமைச்சர், அனைவரும் முகக்கவசம் அணிவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

நோய் பரவல் இல்லா நிலையை உருவாக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். மாவட்ட ஆட்சியர்களை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.

தலைமைச்செயலத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர், சுகாதாரத்துறைச் செயலளார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.