சினிமா

இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சிம்புவின் புதிய தோற்றம்!

நடிகர் சிம்பு தற்போது புதிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு.

அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இத்தனை நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் கூட வெளியில் கசியாமல் பார்த்துக் கொண்ட படக்குழு மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் நடிகர் சிம்பு தோளில் பாம்புடன் தோன்றியுள்ளார் .

மேலும் 2021-ம் ஆண்டின் பொங்கலுக்கு இத்திரைப்படம் திரைக்கு வரும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.