அரசியல்தமிழ்நாடு

கோவையில் முதல்வர், துணை முதல்வர் பற்றி திமுகவினர் அவதூறாக பேசியதால் …கருப்புச் சட்டையணிந்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் பற்றி திமுகவினர் அவதூறாக பேசியதாக, கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கருப்புச் சட்டையணிந்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்து கடந்த 27 ஆம் தேதி கோவையில் அக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள், அவதூறாக பேசியதாக அதிமுகவினர் கண்டன போராட்டம் அறிவித்திருந்தனர்.

அதன்படி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், பீளமேடு, சிங்காநல்லூர், துடியலூர், குனியமுத்தூர், செல்வபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.