பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 74 ரன்களை சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் சூர்யகுமார் யாதவ் 79 ரன்களை குவிக்க, மும்பை அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவது உறுதியாகியுள்ளது.