டெல்லியில் சுட்டு கொன்ற எதிரியை , செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி
டெல்லியில் முன்விரோதம் காரணமாக நடுரோட்டில் விகாஸ் மேத்தா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த 22ம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தின் வீடியோ காட்சியை போலீசார் நேற்று வெளியிட்டனர். இதில் பைக்கில் வந்த ஒருவரை விரட்டி வந்த கொலையாளி அவரை துப்பாக்கியால் சுடுவதும் ரத்த வெள்ளத்தில் அவர் விழுந்ததும் மீண்டும் அருகில் வந்து இரண்டு முறை சுட்டுள்ளார்.
பின்னர் சுட்டு வீழ்த்திய அந்த நபரை தனது செல்போனில் படம் எடுத்துத் தப்பிச் செல்வதும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வீடியோ காட்சியில் பதிவான கொலை செய்த அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.