பாமர மக்களும் தியேட்டர்களுக்கு வரும் வகையில் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் – டி.ராஜேந்தர்
பாமர மக்களும், தியேட்டர்களுக்கு வந்து, வெள்ளித்திரையில், சினிமா பார்க்கும் வகையில், 50 ரூபாய் என்ற அளவிற்கு, கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என, விஜய டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெற உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், அவரது தலைமையில் போட்டியிடும் அணியின், வேட்பாளர் அறிமுக கூட்டம், சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், பாமர மக்களும், தியேட்டர்களுக்கு வரும் வகையில், கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
ஆன்மீகத்திற்குச் செல்ல உள்ளதாக கூறிய டி.ராஜேந்தர், தேவைப்பட்டால், தாம் தற்போது வகிக்கும் விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.