தமிழ்நாடு

இஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் நபிகள் நாயகத்தின் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எளியோருக்கு உதவுதல், அன்புடன் பழகுதல், உண்மையை பேசுதல், கருணை காட்டுதல் போன்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் கடைபிடித்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.