அரசியல்தமிழ்நாடு

கொரோனா பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு கண்டறிந்தால் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்

கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டால், அரசுக்கு ஆய்வகங்கள் உடனடியாக தகவலளிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளனார்.

சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத மற்றும் சொரியாசிஸ் தின விழாவில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து 21 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்கள் முக்கவசம் அணியும் பட்சத்தில் கொரோனா முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், டெங்கு காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.