இந்தியா

குஜராத்தில் முதல் முறையாக நீரில் இறங்கும் விமான சேவை

குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவடியாவில் உள்ள படேல் சிலை இடையே, வரும் சனிக்கிழமை முதல் 2 நீர்வழி விமானாங்களை இயக்கப்போவதாக ஸ்பைஸ்ஜ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான செய்திக் குறிப்பில், படேலின் பிறந்த நாளையொட்டி தொடங்கும் இந்த விமான சேவையின் பயண நேரம் சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.

உடான் திட்டத்தின் கீழ், இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ஆயிரத்து 500 ரூபாய் எனவும், பயணச் சீட்டுகளை இணையதள முகவரியில் நாளை முதல் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.