சினிமா

படப்பிடிப்புக்கு மத்தியில் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு தரிசனம்!…

ஈஸ்வரன் திரைப்பட படப்பிடிப்புக்கு மத்தியில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சென்று நடிகர் சிலம்பரசன் வழிபாடு நடத்தியுள்ளார்.

திண்டுக்கல்லில் மும்மரமாக நடைபெறும் சுசீந்திரனின் ஈஸ்வரன் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சிம்பு, படப்பிடிப்புக்கு மத்தியில் சுற்றுவட்டாரத்திலுள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.