இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 60ஆயிரத்து 074 கோடி கடன் உள்ளது.இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்ப விண்ணப்பத்தை அளிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

அந்த அவகாசத்தை டிசம்பர் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.