இந்தியா

நாளை வானில் தோன்றுகிறது புளூ மூன்!..

வானில் ‘புளூ மூன்’ தோன்றும் அரிதான நிகழ்வு நாளை நடக்க உள்ளது.

புளூ மூன் என்ற சொல் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் சில சமயங்களில் பௌர்ணமி நிலவு நீல நிறமாக தெரியும்.இதற்கு அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 1ந்தேதி பவுர்ணமி வந்த நிலையில் நாளை இரண்டாவது பவுர்ணமி தோன்றுகிறது. அடுத்த நீல நிலா, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் ஏற்படும் என ஆராச்சியாளர்களால் கூறப்படுகிறது.