இந்தியா

இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறுகிறது “PUBG Mobile”

பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் ஆளான மொபைல் விளையாட்டான PUBG Mobile இன்று முதல் இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறுகிறது.

இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து உள்ளதாக கூறி,முதற்கட்டமாக, டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் கடந்த ஜூன் மாதம் தடை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து கடந்த மாதம் 2 ஆம் தேதி சீன தொடர்புடைய 100 செயலிகளுடன், PUBG Mobile உள்ளிட்டவற்றையும் தடை செய்வதாக அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பல சீன செயலிகள் மாயமாகி விட்டாலும், தறவிறக்கம் செய்யப்பட்ட தென்கொரியாவின் PUBG செயலி செல்போன், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று முதல் அதனை பயன்படுத்த முடியாத வகையில் சர்வர்கள் முடக்கப்படுகின்றன.