மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை நனவாகியுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி – எஸ்.பி. வேலுமணி
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் தாமதித்த நிலையில், கொள்கை முடிவின் அடிப்படையில் அரசாணை வெளியிட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவை நனவாக்கியது மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், கொண்ட கொள்கையில் நிலையாக இருந்து மாணவ சமுதாயத்தின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் அரசு, மாண்புமிகு முதலமைச்சர், அண்ணன் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அம்மாவின் அரசு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார்.