அரசியல்தமிழ்நாடு

7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் – தமிழக முதல்வர் பழனிசாமி

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்காகவே அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகக் தெரிவித்துள்ளார் .

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தாம் ஒரு அரசுப் பள்ளி மாணவர் என்ற முறையில் அரசுப் பள்ளி மாணவர்களின் மன உணர்வுகளை புரிந்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரோ, எதிர்க்கட்சிகளோ அல்லது மக்களோ கோரிக்கை வைக்காமலேயே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் ஒப்புதலுக்கு தாமதமாகும் நிலையில், அதைவைத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும், அதற்கு இடமில்லாமல் செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.