உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன !

தமிழுக்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் வகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழ் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாகாணங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கலிபோர்னியாவுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பெட்டியில் தமிழில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், வாக்குச்சீட்டுகள், விண்ணப்பப் படிவங்களும் தமிழில் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் விண்ணப்பப் படிவங்கள் அச்சிடப்பட்டுள்ளன.