குஜராத்தில் பிரதமர் மோடி பாதுகாப்பு பணிக்கு வந்த 23 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி
குஜராத்தில் பிரதமர் மோடி பாதுகாப்பு பணிக்கு வந்த 23 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23 போலீசாருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.