Covid19இந்தியா

டெல்லியில் புதிதாக 5,062 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி…

டெல்லியில் புதிதாக 5,062 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 5,062 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,86,706 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,665 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 6,511 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,47,476 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 32,719 பேர் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் இன்று 44,330 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 46,80,695 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.