நடப்பு செமஸ்டர் தேர்வும் ஆன்லைனில் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத் தேர்வு ஆன்லைன் மூலமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நடப்பு செமஸ்டருக்கான செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 17- ந் தேதியும், எழுத்து தேர்வு நவம்பர் 26-ந் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பருவ தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 60 மதிப்பெண்களுக்கான தேர்வு ஒரு மணி நேரத்திற்கு நடைபெறும் என்றும், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு எழுத வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இறுதி செமஸ்டர் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது மறு தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.