இந்தியா

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிப்பு..!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. ஆண்டுக்கு, இரண்டரை லட்சம் ரூபாய் வருமானம் என்ற உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

கொரோனா ஊரடங்கால், வருமானவரித்தாக்கல் செய்ய அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இந்நிலையில், தற்போது, தனிநபர் வருமான வரித்தாக்கலுக்கான கால அவகாசம், வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வருமான வரிக்கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டிய தேவை இருப்போருக்கான அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.