தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!…
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு நீட்டிப்பு
வருகிற நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க அனுமதி
நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்க அனுமதி
அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
சினிமா தியேட்டர்கள் 10 ஆம் தேதி முதல் இயங்க அனுமதி
50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி தியேட்டர்கள் இயங்க வேண்டுமென உத்தரவு
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைக்கும் அனுமதி
சென்னை கோயம்பேடு பழம், காய்கறி சில்லறை வியாபார கடைகள் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
மூன்று கட்டங்களாக சில்லறை விற்பனை கடைகள் செயல்பட அனுமதி அளித்து உத்தரவு
கோயம்பேடு சந்தையில் பழ மொத்த வியாபாரம் 2 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
அரசியல், மதம், பொழுது போக்கு உள்ளிட்ட கூட்டங்களுக்கு 16 ஆம் தேதி முதல் அனுமதி
100 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் கூட்டங்களை நடத்தலாம் என்று உத்தரவு
பொழுது போக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
திருமண நிகழ்வுகள், இறுதி ஊர்வலங்களில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி
60 வயது மற்றும் அதற்கு குறைவான வயது உள்ளவர்களும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல நாளை முதல் அனுமதி
ஏற்கனவே 50 வயது வரை உள்ளவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
சின்னத்திரை உள்பட திரைப்பட படப்பிடிப்புகளில் ஒரே நேரத்தில் 150 பேர் வரை பணி செய்ய அனுமதி
படப்பிடிப்புகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
எதற்கெல்லாம் தடை தொடர்கிறது?
நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் போன்றவற்றுக்கான தடை தொடரும்
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிக்கும்
புதுச்சேரி நீங்கலாக வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ- பதிவு கட்டாயம்
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாதலங்களுக்கு செல்வோருக்கு இ பதிவு கட்டாயம்
மக்களுக்கு அறிவுறுத்தல்
பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்
நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் கூட்டமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்
பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
வீட்டிலும், வெளியிலும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்
பொது இடங்களில் தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்
அவசிய தேவை இன்றி வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்