சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மலர்தூவி மரியாதை செய்தற் பிரதமர் மோடி …
குஜராத்தில் ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்லின் பிரமாண்ட சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்கு தொடங்கப்படும் கடல் விமான சேவை சுற்றுலாத் தொழிலை வளர்க்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று, தேசிய ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, குஜராத் மாநிலம் கவடியா பகுதியில் நர்மதை ஆற்றில் அமைந்துள்ள ஒற்றுமை சிலை என்று பெயரிடப்பட்டுள்ள பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஒற்றுமை தின பேரணியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்திய, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு புகழாரம் சூட்டினார்.
அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் இருந்து புறப்பட்டு கவடியாவில் நர்மதை ஆற்றில் இறங்கும் கடல் விமான சேவை சுற்றுலாத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் என்றார்.