சிறந்த நிர்வாகத்திற்கான தரவரிசைப் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ள தமிழகம்…
மாநிலங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த நிர்வாகத்திற்கான தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்த பொது விவகாரங்களுக்கான மையம் என்ற ஆய்வு அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆயிரத்து 388 புள்ளிகளுடன் கேரளா முதலிடமும், 912 புள்ளிகளுடன் தமிழகம் 2ம் இடமும் பிடித்துள்ளது. 531 மற்றும் 468 புள்ளிகளுடன் முறையே ஆந்திராவும், கர்நாடகாவும் உள்ளன. உத்தரப்பிரதேசம் தரவரிசைப் பட்டியலில் கடைசியில் இடம் பிடித்துள்ளது.