அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்குகிறது

தமிழகம்-புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மேலும் இபாஸ் இல்லாமல் தமிழகம்-புதுச்சேரி இடையே பயனிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து தமிழகம்-புதுச்சேரி இடையே பேருந்து சேவை உடனடியாக தொடங்குகிறது.