இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்குகிறது!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 81,84,082 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 74,91,513 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,70,458 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,22,111 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 46,963 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 58,684 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். 470 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 91.54 ஆகவும், இறப்பு சதவீதம் 1.49 ஆகவும் உள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 10,98,87,303 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,91,239 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக ICMR தெரிவித்துள்ளது.