தமிழ்நாடு

பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் நவ.23ம் தேதி முதல் துவக்கம்

பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அதில், 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின.

இந்நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான முன்பயிற்சி வகுப்புகள் வரும் 9 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் நடப்பு பருவத்துக்கான வகுப்புகள் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 24 ம் தேதி உடன் முடிவடையும் என்றும் பருவத் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.