Covid19உலகம்

இங்கிலாந்தில் நவம்பர் 5 முதல் முழு ஊரடங்கு அமல் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு…

இங்கிலாந்தில் வருகிற 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இந்த புதிய ஊரடங்கில் அத்தியாவசியமில்லாத பணிகள், கடைகள், அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் என்றும் மாணவர்கள் விரும்பினால் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 274 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.