இந்தியா

கேரளாவில் இன்று முதல் கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் திறப்பு

கேரளாவில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு கிடந்த அருங்காட்சியகங்களும், கடற்கரைகளும் இன்று முதல் பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளன.

இன்று கேரள மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி மக்கள் இந்த இடங்களுக்கு வர விரும்புவார்கள் என்பதால் அவற்றை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதே நேரம் உரிய கொரோனா பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்த பின்னரே மக்கள் இந்த இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த மாத துவக்கத்தில் கேரளாவில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டன. அங்கு வரும் மக்களின் உடல் வெப்பத்தை கண்காணிக்கவும், சானிடைசர் போன்றவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகத்திற்கு வர எஸ்எம்ஸ் அல்லது ஆன்லைன் முன்பதிவு வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் வாகனங்களை ஒருமணி நேரம் மட்டுமே பார்க் செய்ய அனுமதிவழங்கப்படும்.