தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்ட தன் காரணமாகவும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 24-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது.

கடந்த ஒரு வார காலமாக 100 அடிக்கு குறையாமல் இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.70அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7113கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.45 டிஎம்சி ஆக உள்ளது.