இந்தியா

மும்பையில் இன்று முதல் கூடுதலாக 610 மின்சார ரயில்கள் இயக்கத் திட்டம்

மும்பையில் இன்று முதல் கூடுதலாக 610 புறநகர் மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அத்தியாவசியப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்காக தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரயில்களில் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக மத்திய மற்றும் மேற்கு ரயில்தடங்களில் கூடுதலாக 610 ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் மகாராஷ்ட்ரா அரசுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

இதனால் இன்று முதல் இயக்கப்படும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது. மின்சார ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை 80 லட்சத்தைவிட கூடுதலாகும்.

ஆனால் கொரோனா பரவலைத் தடுக்க 22 லட்சம் பயணிகளை மட்டுமே சமாளிக்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.