தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக மேலும் 6000 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு
தமிழகம் உட்பட 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு சரக்கு சேவை வரி இழப்பீட்டுத் தொகைக்காக மேலும் ஆறாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாக விடுவித்துள்ளது.
கொரோனா சூழலில் பொருளாதாரப் பாதிப்பால் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவிக்க முடியவில்லை. அதற்கு மாறாக மாநிலங்களுக்கு வேண்டிய தொகையை மத்திய அரசிடம் கடனாகப் பெறலாம் என அறிவித்தது. இந்நிலையில் இரண்டாவது தவணையாக மேலும் ஆறாயிரம் கோடி ரூபாயைக் கடனாக விடுவித்துள்ளது.
தமிழகம் உட்பட 16 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 3 யூனியன் பிரதேசங்களுக்கு இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. மாநிலங்கள் பெறும் தொகைக்கு ஆண்டுக்கு 4 புள்ளி நான்கு இரண்டு விழுக்காடு வட்டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.