அரசியல்தமிழ்நாடு

பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு, கொரோனா பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய தளர்வுகள் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில், வரும் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க அனுமதிக்கப்படிருந்தது.

இதையடுத்து வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைப்பது, கிருமி நாசினிகளை தயார் நிலையில் வைப்பது, முகக்கவசம் அணிந்து வருவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்டோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.