அரசியல்தமிழ்நாடு

கோவையை பிடித்துவிடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு எப்போதும் நிறைவேறாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ..

கோவை அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் ஈச்சனாரியில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, ” திமுகவின் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வந்து பல்வேறு பொய் புகார்களை கூறிச் சென்றுள்ளார். எப்படியாவது கோவை மாவட்டத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு உள்ளது. அவர் கனவு காண்கிறார் இந்த மாவட்டம் அம்மாவின் கோட்டை ஒருபோதும் இதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

தமிழக முதல்வர் கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை ஐந்து ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். வாக்கு கேட்க நமக்கு மட்டுமே தகுதி உள்ளது. திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. அவர்கள் எதுவும் செய்யவில்லை பொய் மட்டுமே பரப்புவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார்கள் முற்றிலும் புறம்பான வாக்குறுதிகளைக் கொடுத்தனர். தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி வருபவர்கள் திமுகவினர், தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடுவார்கள்” என்று கூறினார்.

இதுகுறித்து மேலும் பேசியவர்,ஒரு சாதாரண விவசாயி அதிமுகவில் முதலமைச்சர் ஆகலாம். மீண்டும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். அது உறுதி. மக்கள் நம்மை எப்பொழுதும் ஆதரிப்பார். திமுகவைப் பொறுத்தவரை அவதூறு பரப்புவதே குறிக்கோள். அம்மா அரசு வந்தவுடன் கட்டப்பஞ்சாயத்து இல்லை, நில அபகரிப்பு இல்லை, கடைகளில் வசூல் கிடையாது. உறுதியாக 2021-இல் எடப்பாடி தான் முதலமைச்சர் இதை யாரும் மாற்ற முடியாது” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார் .