தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், சென்னையை பொறுத்தவரை, நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.