உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு கொரோனா ..!
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று அதனை முறையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவரையும் விட்டு வைக்கவில்லை.
உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதோனாம். இவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கொரோனா சோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு அறிகுறியற்ற தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் சுகாதார விதிகளின்படி வீட்டிலிருந்தே பணிகளை செய்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.