இந்தியாசினிமா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அனூப் சோனி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அவர்களிடம், அம்பேத்காரும், அவரது ஆதரவாளர்களும் எந்த வசனத்தின் நகல்களை எரித்தனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் மனுஸ்மிருதி நூலைப் பற்றி அமிதாப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவரின் பேச்சு மதஉணர்வைப் புண்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் லக்னோ போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.