அரசியல்தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – தமிழக அரசு கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தருமபுரியில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். அத்துடன் கல்விக்கட்டணம் அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். சிறப்பு அந்தஸ்திற்காக தமிழக அரசு எதையும் பறிகொடுக்க தேவையில்லை. எனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணியை கொண்ட தமிழ அரசு அமைத்த குழு மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளது.