அரசியல்தமிழ்நாடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் – ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றி ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்ற செயல் என கூறியுள்ளார்.

பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ள மு.க. ஸ்டாலின், தமிழக அரசும் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.