தமிழ்நாடு

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை – தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பகுஜன்சமாஜ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வருகிற 16-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ள சூழலில், இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, இரட்டை பதிவுகளை நீக்குவது, வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.