தமிழ்நாடு

திரையரங்குகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு

தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் 10ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா அறிகுறியில்லாதோரை மட்டும் அனுமதிக்க வேண்டும், திரையரங்கு வளாகத்துக்குள் முகக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும், முகக்கவசம் அணியாதோரை அனுமதிக்கக் கூடாது, நுழைவு வாயில், வெளியேறும் இடம் உள்ளிட்டவற்றில் கை சுத்திகரிப்பான் வழங்கும் இயந்திரங்களை நிறுவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இருக்கை அமைப்பு இருக்க வேண்டும், மல்டி காம்பிளக்சில் உள்ள திரையரங்கங்கள் திரைப்பட காட்சி நேரத்தை மாற்ற வேண்டும், ஒவ்வொரு காட்சிக்கு பின்னரும் கிருமி நாசினி மூலம் திரையரங்கு முழுவதையும் சுத்தபடுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.