தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் ஆர்வலர்களுக்கு “தமிழ்ச் செம்மல் விருது” வழங்கினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தையொட்டி, மாவட்டந்தோறும் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் ஆர்வலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ” தமிழ்ச்செம்மல் விருது ” வழங்கி, கவுரவித்துள்ளார்.

சென்னை – தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து சென்னை செல்லம்மாள்,திருவள்ளூர் மரியதெரசா, காஞ்சி ஸ்ரீகுமார் உள்ளிட்ட 19 தமிழ் அறிஞர்கள் , இவ்விருதை பெற்றுக் கொண்டனர்.

2019 ஆம் ஆண்டுக்கான ” தமிழ்ச்செம்மல் விருது ” க்கு, மொத்தம் 37 தமிழ் அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.