தெலங்கானா மாநிலத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து
தெலுங்கானாவில் ஊரடங்கு காரணமாக 6 மாதங்களாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மேச்சல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரயில் பெட்டிகளில் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
உடனடியாக அங்கு வந்த ரயில் நிலைய ஊழியர்கள், அங்கிருந்த தீயணைப்பான்களைக் கொண்டு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினரும் அவர்களோடு இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.