இந்தியா

பிரபல கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

பிரபல கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சங்கீத கலாநிதி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற T.N. கிருஷ்ணன், கர்நாடக வயலின் இசைக் கலைஞர் ஆவார்.

T.N. கிருஷ்ணன் மறைவு குறித்து பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசை உலகில் ஒரு வெற்றிடம் உருவாகி விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். இளம் இசை கலைஞர்களுக்கு T.N. கிருஷ்ணன் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்ததாக அவர் புகழாரம் சூட்டி உள்ளார்.