தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகதகில் அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகக் கடலோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடுமென்று வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, சிவகங்கை, கோவை, நீலகிரி , திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது .