துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐக் கடந்தது
துருக்கி நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100யை கடந்துள்ளது .
துருக்கியின் இஸ்மீர் மாகாணம் மற்றும் கீரிஸின் சமோஸ் தீவுக்கு இடையே ஏஜியான் கடலை மையமாக கொண்டு 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், இஸ்மீர் நகரில் கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியடைந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.