அரசியல்உலகம்

அதிபர் தேர்தலை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் முன்பு இருந்ததை விட தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெள்ளை மாளிகை வளாகத்தை சுற்றி எஃகு தடைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட வேலிகள் பாதுகாப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கறுப்பின இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதற்குப்பிறகு தற்போது தான் அதிபர் தேர்தலை ஒட்டி இந்த மாளிகையில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது