Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,487 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் புதிதாக 2,487 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 657 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,34,429 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 30 பேர் பலியானதாக இன்றைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,244 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 2,504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,04,031 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 19,154 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 75,331 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 1,02,45,248 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.