இந்தியா

இந்திய விமானப்படைக்காக பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இன்று மாலை இந்தியா வருகை

பிரான்சில் இருந்து மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகின்றன.

இஸ்ட்ரஸ் விமானத்தளத்தில் இருந்து புறப்படும் 3 விமானங்களும் இடை நிறுத்தாமல் அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. விமானங்களுக்கு நடுவானிலேயே எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் விமானமும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 5 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு அவை விமானப்படையின் பயன்பாட்டில் உள்ளன.